காதல் என்பது கடவுள் அல்ல - அது
கானல் நீர் போன்றது
நீ ஒருவர் மீது காதல் கொள்ளும் வேளை
நினைவில் கொள் -இது
காதல் பூதத்தின் வேலை தான் என்று
பூதம் பார்க்க புகை மூட்டமாகத் தான் தெரியும்
புகையில் எந்த ஏவாளும் தேவதை தான்
அவளை கண்டபின் - நீ
புன்னகையின் கூடாரம் தான் - உன்
வெள்ளை உள்ளம் காதலில் சிக்கும் - வெள்ளியன்று
சில்லரைச் சிரிப்பு -சனி முழுவதும்
ஞானத்தின் சிதைப்பு - ஞாயிறன்று
தித்திக்கும் பேச்சுக்கள் - திங்கள்தோறும்
சேருவோமா என்ற சந்தேகம் எழும் - செவ்வாயன்று
புதிது புதிதாய் பிரச்சனை - புதனன்று
விட்டுவிடலாம் என்ற எண்ணம் - வியாழனன்று
ஆனால் அன்றோ ,
காதலர்கள் சிரிப்பை விட
அழுகையில் சுகம் கொண்டார்கள்
கடவுளின் சன்னிதியை விட
கல்லறையில் இணைந்தார்கள்
இன்றோ,
sight அடித்து
site-ல் செட் செய்து
call-ல் கடலை போட்டு
msg-ல் உறவை முடிக்கின்றனர்
வெறுத்தேன் காதலை
உதிர்த்தேன் அதன்மீதான நம்பிக்கையை!!!
அருமை அருமை...!!!
ReplyDeletesuperb kavi..:)
ReplyDeleteதமிழ் புலவியே! - உன்
ReplyDeleteகவிதை நடையின் அழகுதான் என்னே! - இது
உன் அனுபவப் பேச்சா - இல்லை
ஆதங்கப் பேச்சா
எதுவாயினும் உன்
அழகு தமிழுக்கு வாழ்த்துக்கள் ...!!!
உன் கவிதையின் மேல் எனக்கு காதல்..!!!!
ReplyDeletenice de :):)
ReplyDeleteஎனது எண்ணங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் என் சகாக்களுக்கு - இந்த நன்றியை காணிக்கையாக்குகின்றேன்..!!!!
ReplyDeleteTranslate pls!!!
ReplyDelete