Sunday, April 10, 2011

காதல் வைரஸ்

காதல் என்பது கடவுள் அல்ல - அது

கானல் நீர் போன்றது

நீ ஒருவர் மீது காதல் கொள்ளும் வேளை

நினைவில் கொள் -இது

காதல் பூதத்தின் வேலை தான் என்று

பூதம் பார்க்க புகை மூட்டமாகத் தான் தெரியும்

புகையில் எந்த ஏவாளும் தேவதை தான்

அவளை கண்டபின் - நீ
புன்னகையின் கூடாரம் தான் - உன்

வெள்ளை உள்ளம் காதலில் சிக்கும் - வெள்ளியன்று

சில்லரைச் சிரிப்பு -சனி முழுவதும்

ஞானத்தின் சிதைப்பு - ஞாயிறன்று

தித்திக்கும் பேச்சுக்கள் - திங்கள்தோறும்

சேருவோமா என்ற சந்தேகம் எழும் - செவ்வாயன்று

புதிது புதிதாய் பிரச்சனை - புதனன்று

விட்டுவிடலாம் என்ற எண்ணம் - வியாழனன்று

ஆனால் அன்றோ ,

காதலர்கள் சிரிப்பை விட
அழுகையில் சுகம் கொண்டார்கள்

கடவுளின் சன்னிதியை விட
கல்லறையில் இணைந்தார்கள்

இன்றோ,

sight அடித்து
site-ல் செட் செய்து
call-ல் கடலை போட்டு
msg-ல் உறவை முடிக்கின்றனர்

வெறுத்தேன் காதலை
உதிர்த்தேன் அதன்மீதான நம்பிக்கையை!!!